2025 மே 02, வெள்ளிக்கிழமை

கடை உரிமையாளருக்கு தண்டம்

Suganthini Ratnam   / 2014 மே 21 , மு.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேசத்திலுள்ள பலசரக்குக் கடையொன்றில் பாவனைக்கு உதவாத மற்றும் காலாவதியான உணவுப்பொருட்களை வைத்திருந்ததாகக் கூறப்படும் கடை உரிமையாளருக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான்  என்.எம்.அப்துல்லாஹ்  18,000 ரூபா தண்டம் விதித்தார்.

அத்துடன், கடையிலிருந்து கைப்பற்றப்பட்ட பாவனைக்கு உதவாத மற்றும் காலாவதியான உணவுப் பொருட்களை அழிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார். 

கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் கடை உரிமையாளரை  மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (20) ஆஜர்படுத்தியபோதே நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

இக்கடையிலிருந்து பழுதடைந்த 550 கிலோ  அரிசி,  100 கிலோ வெள்ளைப்பூடு, 325 கிலோ  பழப்;புளி, 200 கிலோ கொத்தமல்லி, 600 கிலோ  கடலை ஆகியனவும்;  காலாவதியான மற்றும் லேபல் ஒட்டப்படாத ஜாம் வகைகள், பிஸ்கட்டுக்கள்,  நூடில்ஸ் ஆகியனவும் செவ்வாய்க்கிழமை (20) கைப்பற்றப்பட்டன.

மேற்படி கடையில் பழுதடைந்த உணவுப் பொருட்கள் காணப்படுவதாக காத்தான்குடி பொதுச் சகாதார பரிசேதகர்களுக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீனின் வழிகாட்டலில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகரான ஏ.ஏ.எம்.றபீக், பொதுச்சுகாதார பரிசோதகர்களான ஏ.எல்.றஹ்மத்துல்லாஹ், கே.சங்கர், எம்.மிதுன்ராஜ், ரி.கருணாகரன் ஆகியோர் இக்கடையில்  சோதனை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .