2025 மே 02, வெள்ளிக்கிழமை

மட்டு. மரமுந்திரிகை விளைச்சல் பாதிப்பு

Menaka Mookandi   / 2014 மே 21 , மு.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.ரவீந்திரன்


மட்டக்களப்பு    மாவட்டத்தில்  தற்போது   மரமுந்திரிகை பருவகாலமாக தோன்றியுள்ள போதிலும் விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். தற்போது நிலவும் காலநிலை மாற்றமே இதற்கான காரணம் என அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

அதிகூடிய வெப்பம், பின்பு மழை, அதன்பின் ஏற்பட்டுள்ள பாரிய வெப்பநிலை  காரணமாக மரமுந்திரிகை பூக்கள் உதிர்ந்து கருகிப்போயுள்ளன. இதனால் குறைந்தளவிலான விளைச்சலே கிடைக்கப்பெற்றுள்ளது என விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அத்;துடன், கறையான் காரணமாக மரமுந்திரிகை மரங்கள் முற்றாக  அழிவடைந்தும் வருகின்றன. இதனால்  ஒரு கிலோ பதப்படுத்தப்பட்ட மரமுந்திரிகைப் பருப்பு 1,500 ரூபாவாக விற்கப்படுகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்துக்குட்பட்ட களுவாஞ்சிக்குடி, களுதாவளை, கிரான், தாந்தாமலை, புதுக்குடியிருப்பு, தாளங்குடா, கிரான்குளம் போன்ற இடங்களில்   அதிகளவு மரமுந்திரிகை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .