2025 மே 02, வெள்ளிக்கிழமை

சிங்கள வகுப்புகள் ஆரம்பிப்பு

Kogilavani   / 2014 மே 21 , மு.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்


மட்டக்களப்பு, மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மகிழூர் கிராத்தில் உருவாக்கப்பட்ட கஜமுகன் மொழி சங்கத்தினுடைய சிங்கள வகுப்புக்கள் செவ்வாயக்கிழமை (20) மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினம் தலைமையில் உத்தியோகப்பூர்வமாக ஆரப்பித்து வைக்கபட்டன.

மொழித்திறனை அபிவிருத்தி செய்ய வேண்டும் எனும் நோக்கத்துடன் இலங்கை அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்ட மும்மொழி திட்டத்தின் கீழ் கிராமங்கள் ஊடாக மொழிச்சங்களை நிறுவி 10 ஆண்டு திட்டத்தின் கீழ்  மும்மொழிகள்  மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்படவுள்ளன.

இதனைக் கருத்தில் கொண்டே மேற்படி வகுப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் பிரதித்  திட்டப்பணிப்பாளர் பாக்கியராசா, கிராம உத்தியோகஸ்தர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். இவ் வகுப்பில் மகிழூர் கிராமத்தினைச் சேர்ந்த இளைஞர், யுவதிகள் கலந்துகொண்டுள்ளனர்.

இவ் வகுப்புகள் 6 மாத காலம் வரை தொடர்ச்சியாக இடம்பெறவுள்ளது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .