2025 மே 02, வெள்ளிக்கிழமை

கழிவகற்றும் வாகனங்கள் தடுத்து வைப்பு

Kanagaraj   / 2014 மே 21 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு மாநகர சபையின் கீழுள்ள திருப்பெருந்துறை களஞ்சிய சாலையில் காத்தான்குடி நகரசபைக்கு சொந்தமான இருகழிவகற்றும் உழவு இயங்திரங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி நகரசபை தலைவர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தெரிவித்தார்.

காத்தான்குடி நகரில் செவ்வாய்க்கிழமை (20) கைப்பற்றப்பட்ட பாவனைக்குதவாத உணவுப்பொருட்களை நீதிமன்ற உத்தரவின்பேரில் மாநகரசபையின் குப்பை கொட்டும் மையமான திருப்பெருந்துறையில் அழிப்பதற்காக சென்றபோது,
பொதுசுகாதார பரிசோதகர்களுக்கும் மட்டக்களப்பு மாநகர ஆணையாளருக்குமிடையே ஏற்பட்ட கருத்துமுரண்பாடுகளையடுத்தே குறித்த வாகனங்கள் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுதொடர்பாக மாநகர ஆணையாளரிடம் கேட்டபோது காத்தான்குடி பொது சுகாதார பரிசோதகர்கள் உரியமுறையில் இவ்விடயத்தை கையாளவில்லை என தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .