2025 மே 02, வெள்ளிக்கிழமை

சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒன்றுகூடல்

Kogilavani   / 2014 மே 22 , மு.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உதவி உத்தியோகத்தர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட கிளையின் ஒன்று கூடலொன்று புதன்கிழமை(21) மட்டக்களப்பு புளியந்தீவு சமுர்த்தி வங்கிச் சங்க மண்டபத்தில் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உதவி உத்தியோகத்தர் சங்கத்தின் பொருளாளர் எம்.பாசுல் அன்வர் மற்றும் அதன் மட்டக்களப்பு மாவட்ட கிளையின் உப தலைவர் எம்.ஐயூப்கான், செயலாளர் எம்.எச்.எம்.அன்வர் உட்பட அதன் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது திவிநெகும திணைக்களத்தினுள் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் உள்வாங்கப்படவுள்ள நிலையில் அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உதவி உத்தியோகத்தர் சங்கம் திவிநெகும திணைக்களத்தின் பணிப்பாளருக்கு முன்வைத்துள்ள கோரிக்கைகள் தொடர்பாக அகில இலங்கை சங்கத்தின் பொருளாளர் எம்.பாசுல் அன்வர் எடுத்துக் கூறினார்.

அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உதவி உத்தியோகத்தர் சங்கம் திவிநெகும திணைக்களம் தொடர்பாக ஏற்கனவே அதன் பணிப்பாளர்களுடன் நடத்திய சந்திப்பின் போது எடுக்கப்பட்ட தீர்மானத்தை சுற்று நிருபமாக தரும் வரைக்கும் திவிநெகும திணைக்களத்தினுள் சமுர்த்தி உத்தியோகத்தர்களை உள்ளீர்க்கும் விருப்பத்தெரிவு விண்ணப்பத்தில் கையொப்பமிட வேண்டாமெனவும் அவர் இக் கூட்டத்தின் போது வலியுறுத்தினார்.

அத்தோடு மட்டக்களப்பு மாவட்டத்தில் சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்குள்ள பிரச்சினைகள் தொடர்பாகவும் அவற்றை தீhத்துக் கொள்வது தொடர்பாகவும் இக் கூட்டத்தில் ஆராயப்பட்டன.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .