2025 மே 02, வெள்ளிக்கிழமை

'எமது உறவுகள் புறக்கணிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது'

Kogilavani   / 2014 மே 22 , மு.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

'எமது உறவுகள் புறக்கணிக்கப்படுவதையும் அவர்களின் தேவைகள், கருத்துக்கள் பின்தள்ளப்படுவதனையும் நாம் ஒரு போதும் அனுமதிக்கமாட்டோம்' என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜெ.ஜெனார்த்தனன் தெரிவித்தார்.

திருகோணமலை புல்மோட்டை கலைமகள் அறநெறிபாடசாலைக்கு புதன்கிழமை தளபாடங்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

முஸ்லிம் சகோதரர்கள் அதிகமாக வாழும் பகுதியில் வாழ்ந்து வரும்; தமிழ் மக்களாக இருந்தாலும் சரி சிங்கள சகோதரர்கள் அதிகமாக வாழும் பகுதியில் வாழ்ந்து வரும் தமிழ் மக்களாக இருந்தாலும் சரி அவர்களை புறக்கணித்து செயற்பட நாம் ஒருபோதும் விடமாட்டோம்.

இதேவேளை தமிழர்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் வசிக்கும் சிங்கள, முஸ்லிம் சகோதரர்களை நாம் அரவணைத்தே செல்கின்றோம். அதேபோன்று எமது தமிழ் உறவுகளையும் அரவணைத்து செல்ல வேண்டிய பொறுப்பு முஸ்லிம், சிங்கள மக்களிடமும், முஸ்லிம், சிங்கள அரசியல் வாதிகளிடமும் காணப்பட வேண்டும்.

இவ்வாறான பகுதிகளில் வாழும் தமிழ் மக்களுக்கு கல்வி மற்றும் சமூக விடயங்களிலும் அரச கருமங்களிலும் சம அந்தஸ்து வழங்கப்படுதல் வேண்டும்.

இவை தொடர்பில் அரச அதிகாரிகளும் அப்பகுதி அரசியல் வாதிகளும் பொறுப்புக்கூற வேண்டும்.

புனித பூமி என்ற பெயரில் எமது தமிழர்களின் விவசாய காணிகள், விளைநிலைகள் என்பன மட்டுமல்லாமல் எமது மயானங்களும் சுவீகரிக்கப்பட்டு கொண்டு வரும் இத்தகைய அநீதியான நடவடிக்கைகள் கட்டவீழ்ந்து விடப்பட்டுக் கொண்டிருக்கும் இந்தகால கட்டத்தில் இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழ் தேசியக் கட்டமைப்பு உறுப்பினர்கள் குரல் கொடுப்பதோடு மக்களிற்கு சார்பான பிரயத்தனங்களையும் மேற்கொள்ள தயங்கமாட்டோம்.

எவ்வாறான நெருக்கடிகள் ஏற்பட்ட போதும் எமது இனத்திற்குpய தனித்துவங்களையும், கலாசாரங்களையும் நாம் பேணிப்பாதுகாப்பதிலும், அதனை பின்பற்றுவதிலும் ஒருபோதும் பின்நிற்கக்கூடாது.

எமது கலை,கலாசார செயற்;பாடுகளிலும் அன்றாட நடவடிக்கைகளிலும் எமது தனித்துவம் சார்ந்த விடயங்கள் அன்றி வேறு விடயங்கள் தலையீடு செய்வதற்கு நாம் உறுதுணையாக ஒருபோதும் நிற்கக்கூடாது.

இங்கு மட்டுமல்ல எமது மாவட்டத்தில் எப்பகுதியில் எமது மக்கள் எண்ணிக்கையில் குறைவாக வாழ்ந்தாலும், மொறவெல, கிண்ணியா, கந்தளாய் போன்ற பகுதிகளில் வாழும் எம் உறவுகளுக்கும் நாம் அவர்களோடு இருக்கின்றோம் என்ற நம்பிக்கை இருக்கின்றது.
அந்த நம்பிக்கையை தொடர்ந்து காப்பாற்றுவதற்கு நாம் பக்க பலமாக இருப்போம்' என்றார்..

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .