2025 மே 02, வெள்ளிக்கிழமை

கஞ்சா வைத்திருந்த பெண் சரீரப் பிணையில் விடுதலை

Kogilavani   / 2014 மே 22 , மு.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு, ஏறாவூர் நகரில் செவ்வாய்க்கிழமை(20) கஞ்சாவுடன் கைதான பெண்ணை 50 ஆயிரம் ரூபா சரீரப் பிணையில் செல்வதற்கு ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம். றியாழ் புதன்கிழமை(21) உத்தரவிட்டார்.

அஸனார் ஸஹர்வான் என்ற 60 வயதுப் பெண் ஏறாவூர் நகரில் வைத்து 11,700 மில்லி கிராம் கஞ்சாவுடன் கைதுசெய்யப்பட்டார்.

இந்நிலையில் இவர் புதன்கிழமை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோதே நீதவான் மேற்படி உத்தரவினை பிறப்பித்தார்.

இதேவேளை, இவ்வழககு எதிர்வரும் ஜுன் மாதம் 25 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படவுள்ளது.

மட்டக்களப்பிலிருந்து வந்த புலனாய்வுப் பொலிஸாரும் மாட்ட புலனாய்வுப் பிரிவினரும் இணைந்தே மேற்படி பெண்ணை கைதுசெய்துள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .