2025 மே 02, வெள்ளிக்கிழமை

கரையோர பாதுகாப்பு நிகழ்வு

Kogilavani   / 2014 மே 22 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


ரீ.எல்.ஜவ்பர்கான்
, தேவ அச்சுதன்

இயற்கையுடன் நண்பனாகி நமது கிராமத்தை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளின் கீழ் மட்டக்களப்பு, கல்லடி கடற்கரையோர பிரதேசத்தை தூய்மைப்படுத்தும் நிகழ்வு வியாழக்கிழமை(22) முன்னெடுக்கப்பட்டது.

பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சினால் கரையோரம் பேணல் மற்றும் மூலவள முகாமைத்துவ திணைக்களத்தின் ஏற்பாட்டில் இன்றைய உலக உயிரின பல்வகை தினத்தையொட்டி இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

கரையோரம் பேணல் திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் கே.கோகுலதீபன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் மாணிக்கம் உதயகுமார்,  மாவட்;ட சுற்றாடல் அபிவிருத்தி அதிகாரசபை,  மட்டக்களப்பு மாநகரசபை, மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்கள், கரையோரம் பேணல் திணைக்களம் ஆகியவற்றின் உத்தியோகஸ்தர்களும் ஊழியர்களும் கலந்துகொண்டனர்.

கல்லடி கடற்கரையில் அடம்பன்கொடி, இராவணன்மீசை போன்ற அரியவகை தாவரங்களும் விலங்குகளும் காணப்படுகின்றன.

கடலை அண்டிய பகுதிகளில் காணப்படும் இத்தாவரங்களால் மண்ணரிப்பு தடுக்கப்படுகின்றது.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .