2025 மே 02, வெள்ளிக்கிழமை

ஒருங்கிணைந்த குழுவை அமைக்க தீர்மானம்

Kogilavani   / 2014 மே 23 , மு.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


சட்டவிரோதமான காணிப் பயன்பாட்டையும் விவசாயச் செய்கையையும் தடுக்க மாவட்ட மட்டத்தில் ஒருங்கிணைந்த குழு ஒன்றை ஏற்படுத்தும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு அரசாங்க அதிபர் சறோஜினிதேவி மன்மதராஜா சார்ள்ஸ் தெரிவித்தார்.

மாவட்ட விவசாய அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அரசாங்க அதிபர் தலைமையில் புதன்கிழமை காலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

நிகழ்வில் பிரதேச செயலாளர்கள், விவசாய, நீர்ப்பாசன, கமநல அபிவிருத்தித் திணைக்களங்களின் அதிகாரிகள், தெங்குப் பயிர்ச்செய்கைச் சபை உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளும் பங்கு பற்றினர்.

இதன்போது உரையாற்றிய அவர்,

சட்டவிரோதமான காணிப் பயன்பாடு பற்றியும் அத்துமீறிய விவசாயச் செய்கை பற்றிய பிரச்சினை  ஒவ்வொரு விவசாயச் செய்கைக் காலகட்டத்திலும் எழுகின்றன.

ஆகையினால் இத்தகைய பருவகாலத்தில் எழுந்து மறைகின்ற பிரச்சினைகளைத் தீர்க்க ஒரு பொறிமுறையை வகுத்தாக வேண்டும். இல்லையெனில் இது முடிவின்றித் தொடரும்.   


அதற்காக காணி, விசாயம், நீர்ப்பாசனத்தோடு சம்பந்தப்பட்ட சகல அதிகாரிகளையும் உள்ளடக்கியதான ஒருங்கிணைந்த குழுவொன்று நியமிக்கப்பட்டு அதன் மூலமாகத் தீர்வு காணப்பட வேண்டியது அவசியம்.  

இதேவேளை திணைக்கள தலைவர்கள், அதிகாரிகள், அலுவலர்கள் மத்தியில் சிறந்த இணைப்பாக்கம் இருக்க வேண்டியதன் அவசியம்' என இதன்போது அவர் சுட்டிக்காட்டினார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .