2025 மே 02, வெள்ளிக்கிழமை

தொற்றா நோய் தொடர்பான விழிப்பூட்டல் கருத்தரங்கு

Kogilavani   / 2014 மே 23 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எம்.அனாம்


ஓட்டமாவடி பிரதேச சபையில் கடமையாற்றும் ஊழியர்களுக்கான பரிசோதனையும் விழிப்பூட்டல் கருத்தரங்கும் வியாழக்கிழமை (22) ஓட்டமவடி பிரதேச சபை கேட்போர் கூடத்தில் பிரதேச சபையின் தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட் தலைமையில் இடம்பெற்றது.

ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம்; தனது பிரிவில் உள்ள திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களில் கடமையாற்றும் ஊழியர்களுக்கு தொற்றா நோய் தொடர்பான விழிப்பூட்டல் கருத்தருங்குகளை நடத்தி வருகின்றது.

இதற்கமைவாகவே மேற்படி கருத்தரங்கு இடம்பெற்றது.

இதன்போது ஊழியர்களுக்கான இரத்தம் மற்றும் சிறுநீர் என்பன பரிசோதிக்கப்பட்டதுடன் தொற்றா நோய் தொடர்பான விழிப்பூட்;டல் கருத்தரங்கும் இடம்பெற்றது.

இக் கருத்தரங்கில் வளவாலர்களாக ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்கர் எஸ்.ரி.எம்.நஜீப்கான், சுகாதார கல்வி உத்தியோகத்தர் ரீ.தஜிகரன், ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஏ.எல்.நௌபர் ஆகியோர் கலந்துகொண்டு தொற்றா நொய் தொடர்பான விளக்கங்களை வழங்கினர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .