2025 மே 02, வெள்ளிக்கிழமை

கிராமத்தில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு முதலுதவிப் பயிற்சி

Kogilavani   / 2014 மே 23 , மு.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


ஏறாவூர் பற்று செங்கலடிப் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கிராமங்களில் கடமையாற்றும் கிராம சேவையாளர்களுக்கும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்குமான முதலுதவிப் பயிற்சி நற்று வியாழக்கிழமை (22)  செங்கலடிப் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

ஹென்டிகப் இன்ரநேஷனல் நிறுவனத்தின் அனுசரணையுடன் இடம்பெற்ற இந்த முதலுதவிப் பயிற்சியில் கிராம சேவையாளர்களும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுமாக 40 பேர் பங்குபற்றினர்.

நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் நவரூபரஞ்சனி முகுந்தன், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.கெங்காதரன், ஹென்டிகப் இன்டநேஷனல் நிறுவனப் பிரதிநிதி எம்.முரளீதரன் இலங்கை செஞ்சிலுவைச் சங்க மட்டக்களப்புக் கிளைத் தலைவர் ரீ.வசந்தராஜா உள்ளிட்டோரும் எனைய அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .