2025 மே 02, வெள்ளிக்கிழமை

ரட்டவிருவோ அங்கத்தவர்களின் கூட்டம்

Kogilavani   / 2014 மே 23 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


வெளிநாட்டில் தொழில்புரியும் வீரர்களையும் அவர்களது குடும்பத்தையும் மேம்படுத்தும் வேலைத் திட்டத்தின்கீழ் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு நலன்புரி நலனோம்பு அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டுவரும் ரட்டவிருவோ அமைப்பினது அங்கத்தவர்களின் கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை (23) காலை ஈச்சந்தீவு கிராமத்தில் இடம்பெற்றது.

மண்முனை மேற்கு வவுணதீவுப் பிரதேச செயலக வெளிநாட்டு வேலைவாய்ப்பு நலன்புரி உத்தியோகத்தர் கே.அருணாவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் மண்முனை மேற்கு பிரதேச திவிநெகும முகாமையாளர் த.சத்தியசீலன், கிராம உத்தியோகத்தர் தட்சணாமூர்த்தி, திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர் த.யோகேஸ்வரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, ரட்டவிருவோ அமைப்பின் அங்கத்தவர்களுக்கு வீட்டுக்கடன், தொழில் ஊக்குவிப்புக் கடன்  மற்றும் கடன்பெறுவதற்கு தேவையான ஆவணங்கள், ஏனைய உதவிகள் வழங்கப்படும் திட்டங்கள் பற்றி வெளிநாட்டு வேலைவாய்ப்பு நலன்புரி உத்தியோகத்தர் கே.அருணா விளக்கமளித்தார்.

அத்துடன் தொழில் தேடி வெளிநாடு செல்லும்போது எதிர்நோக்கும் பிரச்சனைகள், வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் தொடர்புகொள்ளும் முறைகள் அத்துடன் பதிவுசெய்யப்படாத உபமுகவர்களின் ஊடாக செல்வதனால் ஏற்படும் பாதிப்பான விளைவுகள் பற்றியும் விளக்கமளிக்கப்பட்டது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .