2025 மே 02, வெள்ளிக்கிழமை

மோட்டார் போக்குவரத்து திணைக்கள கருத்தரங்கு

Kanagaraj   / 2014 மே 24 , மு.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


-க.ருத்திரன்


மட்டக்களப்பு மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் வாகன சாரதிகளுக்கான வாகன புகை பரீட்சித்தல் நிகழ்ச்சித்திட்ட கருத்தரங்கு பேத்தாழை குகனேசன் மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (23) இடம்பெற்றது.

இக்கருத்தரங்கில் சாரதிகளுக்கான வீதி பாதுகாப்பு, வாகன புகை வெளியேற்றம், வாகன பராமரிப்பு,சாரதிகளின் வினைத்திறனை மேம்படுத்தல் போன்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கு இடம்பெற்றன.

மேற்படி நிகழ்வில் மட்டக்களப்பு மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன், மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் எஸ்.எச்.ஹரிச்சந்திரா, பிரதி ஆணையாளர் எஸ்.பிரேமரட்ன, மட்டக்களப்பிற்கான மோட்டார் போக்குவரத்து பரிசோதகர்களான ஹேமல்தர்மசேன, யு.எல்.ஏ.வகாப்    மற்றும் வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் லால்செனவிரட்ன ஆகியோர் கலந்து கொண்டு சாரதிகளுக்கு அறிவுரைகளை வழங்கினர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .