2025 மே 02, வெள்ளிக்கிழமை

புனரமைக்கப்பட்டு வரும் விளையாட்டு மைதானம்

Kanagaraj   / 2014 மே 24 , மு.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடியில் புனரமைக்கப்பட்டு வரும் தேசிய மட்டத்திலான ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதானத்தின் புனரமைப்பு வேலைகள் பூர்த்தி அடையும் நிலையிலுள்ளதாக காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் தெரிவித்தார்.

பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியினால் விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஆகியவற்றின் இரண்டு கோடி ரூபா நிதியொதுக்கீட்டில் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதானம் கடந்த இரண்டு வருடங்களாக புனரமைக்கப்பட்டு புனரமைப்பு வேவைகள் முடிவடையும் நிலையிலுள்ளது.

ஆயிரம் பார்வையாளர்கள் அமர்ந்திருந்து போட்டிகளை கண்டு கழிக்க கூடிய பார்வையாளர் அரங்கு மற்றும் மைதானத்தில் பிரமுகர்கள் இருக்கும் மண்டபம் என்பனவும் புனரமைக்கப்பட்டுள்ளதுடன் தேசிய மற்றும் சர்வதேச ரீதியிலான உதைபந்தாட்ட போட்டிகளை நடாத்தக் கூடிய வகையிலும் இம் மைதானம் புனரமைக்கப்பட்டுள்ளது.

மைதானததில் புற்கள் நடப்பட்டுள்ளதுடன் அவற்றை பராமரிக்கும் வகையிலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
புனரமைக்கப்பட்டுள்ள ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதானத்தினை காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர் சென்று பார்வையிட்டார்.

புனரமைப்பு வேலைகள் விளையாட்டுத்துறை அமைச்சினால் மேற் கொள்ளப்பட்டு முடிவுற்றுள்ள நிலையில் மைதானத்தினை விளையாட்டுத்துறை அமைச்சு காத்தான்குடி நகர சபைக்கு கையளிக்கவுள்ளது.

இதன் பின்னர் மைதானத்தில் விளையாட்டு வீரர்களை விளையாடுவதற்கு அனுமதிக்கமுடியுமென காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர் தெரிவித்தார்.

,ந்த மைதானத்தை திறந்து வைப்பதற்காக விரைவில் வெளிநாட்டு உதைபந்தாட்ட அணியொன்றுடன் காத்தான்குடி உதைபந்தாட்ட அணி பங்கு பற்றும் சிநேகபூர்வ உதைபந்தாட்ட போட்டியொன்றும் நடாத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .