2025 மே 02, வெள்ளிக்கிழமை

மாமியாரின் பெட்டகத்தை உடைத்த மருமகன் கைது

Kanagaraj   / 2014 மே 24 , மு.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மாணிக்கப்போடி சசிகுமார்

மட்டக்களப்பு புதூரில் மாமியாரின் இரும்புப் பெட்டகத்தை உடைத்து கொள்ளையிட்ட மருமகனை மட்டக்களப்பு பொலிஸ் நிலைய குற்றப்புலன் விசாரணைப் பிரிவுப் பொலிஸார் இன்று சனிக்கிழமை கைது செய்துள்ளனர்.

தான் கோயிலுக்குச் சென்ற பின்னர் தனது வீட்டில் இருந்த இரும்புப் பெட்டகம் உடைக்கப்பட்டு உள்ளே இருந்த தங்க வளையல் கொள்ளையிடப்பட்டுள்ளதாக வெள்ளிக்கிழமை(23) மட்டக்களப்பு புதூர் எல்லை வீதியைச் சேர்ந்த ஞானசேகரம் பரிமலர் (60 வயது) மட்டக்களப்பு பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.

குறித்த சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு குற்றப் புலன்; விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சம்பத் பெரேராவின் வழிகாட்டலில் பொலிஸ் அதிகாரிகளான ஏ.ரி.எம்.சுபியான்(61217), தமிழ்ச்செல்வன்(67995), மஜீத்(80044), பிரியங்கர(66426) ஆகிய பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட விசாரணையினை அடுத்து முறைப்பாட்டாளரின் மருமகனான கந்தசாமி ரவிக்குமாரை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவரிடம் மேற்கொண்ட விசாரணையை அடுத்து அவரிடமிருந்து ஒன்றரைப் பவுண் வளையலை மீட்டுள்ளதாகவும் இன்று நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .