2025 மே 02, வெள்ளிக்கிழமை

டிப்பர் மோதி சிறுமி காயம்

Kanagaraj   / 2014 மே 24 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன், க.ருத்திரன் ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மண்முனைப் பாலத்தில் நின்று கொண்டிருந்த நஸ்மல் பாத்திமா நஜாத் (வயது 8) என்ற சிறுமி மீது டிப்பர் வண்டியொன்று வேகத்தடையை  கடந்து மோதியதால் குறித்த சிறுமி படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

மண்முனைப் பாலத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை  இடம் பெற்ற விபத்தில் படுகாயமடைந்த சிறுமி, மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் இன்று பிற்பகல் 4.30 மணியளவில் இடம் பெற்றுள்ளது.  சிறுமி தனது தாய் மற்றும் குடும்பத்துடன் மண்முனைப்பாலத்தினை பார்த்துக் கொண்டு நின்றபோதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

இந்த டிப்பர் வாகனம் குறித்த மாணவியின் கால்கள் இரண்டுக்கு மேலாலும் ஏறிச் சென்றுள்ளதால் இந்த மாணவியின் இரண்டு கால்களும் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செயதுள்ளதோடு விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .