2025 மே 02, வெள்ளிக்கிழமை

கஞ்சா வைத்திருந்த பெண்ணுக்கு விளக்கமறியல்

Kanagaraj   / 2014 மே 24 , மு.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

ஏறாவூர் நகரில்  7220 மில்லி கிராம் கஞ்சாவுடன் வியாழக்கிழமை (22) கைது செய்யப்பட்ட பெண்ணை ஜுன் மாதம் 6 ஆம் திகதி வரை   விளக்கமறியலில் வைக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்ற பதில் நீதிபதி வெள்ளிக்கிழமை (23) உத்தரவிட்டார்.

ஏறாவூர் பன்சலை வீதியைச் சேர்ந்த சின்னலெப்பை சுபைதா உம்மா (56 வயது) என்ற பெண் 2570 மில்லிகிராம் கஞ்சாவை விற்பனைக்காகவும்; 4650 மில்லிகிராம் கஞ்சாவைத் தன்வசம் வைத்திருதார் என்ற சந்தேகத்தின் பேரில்  வியாழக்கிழமை (22) ஏறாவூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

இந்தப் பெண்ணை ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்ற பதில் நீதிபதி ஏ.எம். முனாஸ் முன்னிலையில் வெள்ளிக்கிழமை (22) ஆஜர்படுத்தியபோது அவர் மேற்படி  உத்தரவை பிறப்பித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .