2025 மே 02, வெள்ளிக்கிழமை

'மகிழ்ச்சியான குடும்பம் ஆரேக்கியமான சமூகம்'

Kanagaraj   / 2014 மே 24 , மு.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்


மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்எருவில்பற்று பிரதேசத்திற்குட்பட்ட மகிழூர் கிராமத்தில் பிரதேச செயலகம், கிறிஸ்தவ வாலிபர் சங்கத்தின் (ymca)  நிறுவனத்தின் அனுசரணையுடன் 'மகிழ்ச்சியான குடும்பம் ஆரேக்கியமான சமூகம்'  எனும் விழிப்புணர்வு நிகழ்வு ஒன்றினை வியாழக்கிழமை(22) மகிழூர் பொது விளையாட்டு மைதானத்தில் நடத்தியது.

இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டமானது, வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழுகின்ற யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட  பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான அங்கவீனமுற்ற சிறுவர்கள் மற்றும் உள்நாட்டில் இடம் பெயர்ந்த சிறுவர்களின் சமூக பொருளாதார சூழலை மேம்படுத்தும் நோக்கத்தில்  இடம்பெற்று வருவதாக மட்டக்களப்பு  கிறிஸ்தவ வாலிபர் சங்கம் (ymca)  தெரிவித்துள்ளது.

இந்நிகழ்வின் போது, சிறுவர்களுக்கு விளையாட்டுக்கள் மற்றும் வினாக்கள் கேட்கப்பட்டு பரிசில்களும் வழங்கப்பட்டன.

இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்வுகள் தற்பொழுது மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலகபிரிவுகளிலும்  இடம்பெற்று  வருவதாக மட்டக்களப்பு கிறிஸ்தவ வாலிபர் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிகழ்வில், மண்முனை தென்எருவில்பற்று பிரதேச செயலாளர் கலாநிதி எம்.கேபாலரெத்திணம் மற்றும் சிறுவர் நன்நடத்தை உத்தியோகஸ்தர்கள், கிராமசேவகர்கள் பொது மக்கள் சிறுவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .