2025 மே 02, வெள்ளிக்கிழமை

வாகன விபத்து ஒருவர் படுகாயம்

Kanagaraj   / 2014 மே 24 , மு.ப. 07:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல், எஸ்.ரவீந்திரன்


மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் கோட்டைக்கல்லாறு பாலத்தில் இன்று சனிக்கிழமை(24) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலத்த காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

காரின் முன் டயர் வெடித்ததனால் வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

கத்;தான்குடியிலிருந்து கல்முனை நோக்கி காரில் பயணித்துக் கொண்டிருந்த போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் பயணித்த சாரதி பலத்த காயங்களுக்கு உள்ளாகி களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிப்பதுடன்,

மேற்படி காயமடைந்தவர் காத்தான்குடியை சேர்ந்த மொகமட் ஸ்மையில்(66) என அடையாளங் காணப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்திய அத்தியட்சகர் கு.சுகுணன் தெரிவித்தார்.

காரினுள் இருந்த பலூன் (car pack) வெளிவந்ததால் இவர் உயிர் பிழைத்துள்ளாதாக வைத்திய அத்தியட்சகர் மேலும் தெரிவித்தார்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .