2025 மே 02, வெள்ளிக்கிழமை

இலத்திரனியல் கழிவு முகாமைத்துவ வாரம்

Kanagaraj   / 2014 மே 24 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

இலத்திரனியல் கழிவுகளற்ற இலங்கை என்ற தொனிப்பொருளில் இவ்வருடம் தேசிய இலத்திரனியல் கழிவு முகாமைத்துவ வாரம் 2014.05.27 இல் இருந்து 2014.06.02 வரை நடைபெறவுள்ளது.

தேசிய இலத்திரனியல் கழிவு முகாமைத்துவ நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மத்திய சுற்றாடல் அதிகார சபை இந் நிகழ்ச்சித்திட்டத்தை இவ்வருடம் நடைமுறைப்படுத்துகிறது.

மட்டக்களப்பில், பொது மக்கள் தங்களது இலத்திரனியல் கழிவுகளை, மே மாதம் 27 ஆம் திகதியிலிருந்து ஜூன் மாதம் 02 ஆம் திகதி வரை உங்கள் பிரதேசத்தினூடாக வரும் சேவை வாகனங்களுக்கு கையளிக்கலாம் அல்லது, மே மாதம் 31 ஆம் திகதியன்று மட் இந்துக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில்; இயங்கும் இலத்திரனியல் கழிவு சேகரிப்பு நிலையத்தில்; கையளிக்க முடியும் என மத்திய சுற்றாடல் அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட காரியாலயம் அறிவித்துள்ளது. அவசர அழைப்புகளுக்கு   0779181112இ 0754337515 என்ற இலக்கங்களுடனும் மாவட்டக் காரியாலயத்தின் 0652227522 இலக்கத்துடனும் தொடர்பு கொள்ள முடியும்.

இலத்திரனியல் மற்றும் மின் சாதனங்களில் ஈயம், சில்வர், கட்மியம், அன்டிமனி, பெரிலியம், ஆசணிக் போன்றன மனிதனுக்கு ஆபத்தை விளைவிக்கக்; கூடிய இரசாயனப்பதார்த்தங்கள் அடங்கியுள்ளன.

இலத்திரனியல் கழிவுகள் முறையற்ற விதத்தில் சூழலில் கொட்டப்படுவதால் எமது சுகாதாரத்திறகும் எமது சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுவதோடு ஏனைய உயிரினங்களில் வாழ்வுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.

வீடுகள் , காரியாலயங்களில் பாவனையின் பின் கழிவாக அகற்றப்படும்   இலத்திரனியல் கழிவுகளான விளையாட்டுப் பொருட்கள், மின் விசிறிகள், கணினிகள் மற்றும் அவற்றின் உதிரிப்பாகங்கள், கையடக்க தொலைபேசிகள், மின்கலன்கள், மின்னேற்றிகள், கணிப்பான்கள், போட்டோக் கொப்பி இயந்திரங்கள், பெக்ஸ் இயந்திரங்கள், பிளன்டர்கள், ரைஸ் குக்கர்கள் போன்றவற்றை மிகவும் பாதுகாப்பாக கழிவகற்ற இந்தச் சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் எனவும் மாவட்ட காரியாலயம் அறிவித்துள்ளது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .