2025 மே 02, வெள்ளிக்கிழமை

வேலிகளை பிடுங்கியதாக பொலிஸில் புகார்

Kanagaraj   / 2014 மே 24 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள சவுக்கடி அக்மீர்வத்தை கிராமத்தில் மீள்குடியேற்ற வளவுகளில் உள்ள கொங்கிறீற் வேலிக்கட்டைகள் இனந்தெரியாதோரால் பிடுங்கி உடைத்து நொருக்கப்படுவதாக பொலிஸில் புகாரிடப்பட்டுள்ளதாக அக்மீர்வத்தைக் கிராம வாசிகள் தெரிவிக்கின்றனர்.

தமது பழைய இடங்களுக்குத் திரும்பக் கூடிய சுமூக நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து தாங்கள் தங்களது காடுமண்டிக் கிடக்கும் வளவுகளைத் துப்புரவாக்கி வேலிகளை அடைத்த பொழுதும் விஷமிகளால் வேலிகளும,; கொட்டில்களும் சேதப்படுத்தப்படுவவதாக கிராம வாசிகள் பொலிஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.

இது குறித்து அக்மீர்வத்தை கிராம வாசியான அசனார் ஜவ்பர் தெரிவிக்கும்போது, முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவினால் 1979 ஆண்டு வழங்கப்பட்ட காணிகளில் முஸ்லிம்கள் மீளக்குடியேறுவதில் பல தடைகள் ஏற்படுத்தப்படுகின்றன.

1973 ஆம் ஆண்டு காணிக் கச்சேரி நடத்தப்பட்டு அதன்படி ஏறாவூர் அக்மீர்வத்தை அல்லது சவுக்கடித் தோட்டம் எனுமிடத்தில் அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவினால் காணி அளிப்பு சிறப்பு ஏற்பாடுகள் சட்டத்தின் கீழ் ஏறாவூரைச் சேர்ந்த 21 முஸ்லிம் வறிய குடும்பங்களுக்கு சுமார் 30 ஏக்கர் காணித் துண்டுகள் பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தன.

மேற்குறித்த காணித் துண்டுகளுக்கு அப்போதைய ஜனாதிபதியாகவிருந்த ஜே.ஆர்.ஜெயவர்தனவினால் iயொப்பமிடப்பட்ட காணி உறுதிப்பத்திரமும் அப்போதே வழங்கப்பட்டிருந்தது.

பயங்கரவாத வன்முறைகள் காரணமாக 1985 ஆம் ஆண்டுக்குப் பின்னர் குறித்த காணித்துண்டுகளைப் பராமரிக்கக் கூடிய சூழலை இல்லாததினால் குடியிருப்பாளர்கள் அங்கிருந்து வெளியேறி விட்டார்கள்.

எனினும் கிழக்கில் அமைதிச் சூழ்நிலை திரும்பியதன் பின்னர் அக்மீர்வத்தை கிராமத்தவர்கள் மீண்டும் தங்களது பழைய இடங்களுக்குத் திரும்பிக் கொண்டிருகின்றார்கள்.

இவ்வேளையில் தமது வளவுகளைத் துப்புரவு செய்து வேலிகளை இடும்போது இரவில் வரும் இனம் தெரியாத விஷமிகள் வேலிகளுக்கும் கொட்டில்களுக்கம் சேதமேற்படுத்துகிறார்கள் இதுவிடயமாக பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது'என தெரிவித்தார்.









You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .