2025 மே 02, வெள்ளிக்கிழமை

மட்டக்களப்பு மாவட்ட பொருளாதாரம் வளர்ச்சி: பி.பீ.ஜெயசுந்தர

Kanagaraj   / 2014 மே 24 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் பொருளாதாரம் 11 வீதம் வளர்ச்சி அடைந்துள்ளதாக நிதியமைச்சின் செயலாளரும், திறைசேரியின் செயலாளருமான கலாநிதி பி.பீ.ஜெயசுந்தர மட்டக்களப்பு டோபா மண்டபத்தில் வைத்து மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சிறு நடுத்தர தொழில் முயற்சியாளர்களை சந்தித்து உரையாற்றிய போது இன்று (24) தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பொருளாதாரம் 11 வீதத்தினால் வளர்ச்சி கண்டுள்ளது. கிராமங்களின் அபிவிருத்தியும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வீதி அபிவிருத்தி, கல்வி, சுகாதாரம், வாழ்வாதாரம், பாலங்கள் நிர்மாணம், குளங்கள் நிர்மாணம் என பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் இந்த மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதே போன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து கிராமங்களும் வளர்ச்சியும் முன்னேற்றமும் கண்டு வருகின்றன.
மட்டக்களப்பு மாவடடத்தின் அபிவிருத்தியிலும் கிராமங்களின் வளர்ச்சியிலும் ஜனாதிபதி விஷேட கவனம் செலுத்தி வருகின்றார்.

எதிர் காலத்தில் இந்த மாவட்டத்திலுள்ள அனைத்து கிராமங்களின் தேவைகளும் முழுமையாக நிறைவேற்றிக் கொடுக்கப்படும். அதற்கான துரித நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.
 
இளம் முயற்சியாளர்களை ஊக்கப்படுத்த வங்கிகள் துரிதமாக செயற்பட வேண்டும். வங்கிகள் அவர்களின் காலடிக்குச் சென்று சேவையாற்ற வேண்டும் எனவும் தெரிவித்தார்.

கிராம அபிவிருத்தி வங்கி மற்றும், மக்கள் வங்கி, இலங்கை வங்கி ஆகிய வங்கிகளின் தலைவர்களை அழைத்து இது விடயமாக நான் பேசவுள்ளேன்.

அதே போன்று இந்த வங்கிகளின் பிராந்திய முகாமையாளர்களை அழைத்து மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பேசுவார்.
இளம் தொழில் முயற்சியாளர்கள் மற்றும் பெண் முயற்சியாளர்களை ஊக்கப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொழும்பு போன்ற நகரங்களில் வாழ்வதை விட மட்டக்களப்பில் இருப்பது மகிழ்;ச்சியளிக்கின்றது. இங்கு சிறந்த சூழல் காணப்படுகின்றன.

இவ்வாறான சந்திப்புக்களை மூன்று மாதத்திற்கு ஒரு முறை மேற் கொள்வது சிறந்ததாகும்.
தொழில் முயற்சியாளர்கள் மற்றும் மக்கள் கடன்களை பெற்றுக் கொள்வதிலுள்ள சிரமங்களை தீர்த்து வைப்பதுடன் அவர்களின் தொழில் முயற்சிகளை ஊக்கப்படுத்தி உதவவேண்டும். கடன் பெறுவதிலுள்ள சிரமங்களை தீர்த்து வைக்க வேண்டும். 

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திறமையானவர் அவரின் சேவையை பாராட்டு கின்றேன். வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக இருந்து வடமாகாணத்தில் இவர் சிறப்பாக கடமையாற்றியவர் என அவர் மேலும் தெரிவித்தார்.
 
இந்த நிகழ்வில் நிதியமைச்சின் உதவி செயலாளர்கள் மற்றும் உள் நாட்டு இறைவரி திணைக்களத்தின் ஆணையாளர் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மேலதிக அரசாங்க அதபர் எஸ்.கிரிதரன் உட்பட பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள். அரசாங்க அதிகாரிகள், வங்கிகளின் பிராந்திய முகாமையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .