2025 மே 02, வெள்ளிக்கிழமை

மண்முனைப்பாலத்தில் கடந்த ஒரு மாதத்தில் இருவேறு விபத்துக்கள்

Suganthini Ratnam   / 2014 மே 25 , மு.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

புதிதாக அமைக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பாலத்தில்  ஏப்ரல் மாதம் 25ஆம் திகதியிலிருந்து இம்மாதம் 25ஆம் திகதிவரையான ஒரு மாத காலத்தினுள் இடம்பெற்ற 02 வாகன விபத்துக்களில் ஒருவர் மரணமடைந்ததுடன், ஒருவர் படுகாயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 15 தினங்களுக்கு முன்னர் இப்பாலத்தினூடாகச்  சென்ற மோட்டர் சைக்கிளுடன் டிப்பர் ரக வாகனமொன்று மோதியதால், மோட்டர் சைக்கிளில் சென்ற காத்தான்குடியைச் சேர்ந்த எம்.முகம்மட் தம்பி  என்பவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ஒரு வாரத்தின் பின்னர் மரணமடைந்தார்.

இதேவேளை, கடந்த  23ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த  புதிய காத்தான்குடி பிரசேத்தைச் சேர்ந்த நஸ்மல் பாத்திமா நஜாத் (வயது 8) என்பவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர் தனது தாய் மற்றும் குடும்பத்துடன் மண்முனைப்பாலத்தை பார்த்துக்கொண்டு நின்றபோது, இப்பாலத்தினூடாகச் சென்ற  டிப்பர் ரக வாகனமொன்று இவர் மீது மோதியதால் படுகாயமடைந்ததாகவும் பொலிஸார் கூறினர்.

ஜப்பான் அரசாங்கத்தின் நிதியுதவியில் அமைக்கப்பட்ட  மண்முனைப்பாலம் ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி திறந்துவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .