2025 மே 02, வெள்ளிக்கிழமை

வாளியப்பா தைக்கா ஜும்மா பள்ளிவாசலை விஸ்தரிக்க ஏற்பாடு

Suganthini Ratnam   / 2014 மே 25 , மு.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


ஏறாவூர் முதலாம் குறிச்சியிலுள்ள வாளியப்பா தைக்கா ஜும்மா பள்ளிவாசலை 02  அடுக்கு மாடிகள் கொண்டதாக விஸ்தரிப்பதற்கு  சனிக்கிழமை (24) அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.

பொதுமக்களின் நிதியுதவியுடன்  02  மாடிகளைக் கொண்டதாக  நவீன முறையில் இப்பள்ளிவாசலை நிர்மாணிக்கவுள்ளதாக வாளியப்பா தைக்கா பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் செயலாளர் எஸ்.எம்.எம்.ஹனீபா தெரிவித்தார்.

இதன் முதற்கட்ட செலவுகளுக்காக மேற்படி  பிரதேச மக்கள் ஒரு மில்லியன் ரூபாவை  வழங்கியுள்ளதாக மேற்படி பள்ளிவாசல் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் வாளியப்பா தைக்கா பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் தலைவர் எம்.றிபாய்தீன்,  உபதலைவர் எச்.பஷீர், சர்வோதய நிறுவனத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் ஈ.எல்.அப்துல் கரீம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இங்கு வாளியப்பா தைக்கா பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் செயலாளர் எஸ்.எம்.எம்.ஹனீபா உரையாற்றுகையில்,

'இந்த ஊரின் எந்தவொரு அரசியல்வாதிகளிடமும் சென்று கையேந்தாமல், முற்றுமுழுவதுமாக  இரண்டடுக்கு மாடிகளைக் கொண்டதாக  ஜும்மா பள்ளிவாசல் பிரதேச மக்களின் நன்கொடை மூலம் நிர்மாணிக்கப்படவுள்ளது.  முதற்கட்ட நிர்மாணப் பணிகளுக்காக மக்கள் நிதியுதவி செய்திருப்பது மகிழ்ச்சி தருகின்றது.

இதன் மூலம் ஒரு சமூகத்தின் ஆன்மிக கலாசார விருத்திக்கு மக்களின் பங்களிப்பு எந்தளவுக்கு உறுதுணையாக இருக்கும் என்பதை வெளிப்படுத்தி நிற்கின்றது.

மேலும், அரசியல்வாதிகளையோ வெளி உதவிகளையோ எதிர்பார்த்துக் காத்திருக்காமல் தமது சொந்தப் பங்களிப்பின் மூலம் தமது தேவைகளையும் பிரச்சினைகளையும் தீர்த்துக்கொள்ளலாம் என்பதையும் மக்கள் தந்த இந்த ஆதரவு மூலம் நிரூபணமாகியுள்ளது.

இந்த முன்னுதாரணத்தை நாட்டின் நாலாபுறங்களிலுமுள்ள மக்கள் கருத்திற்கொண்டு செயற்படுவார்களாக இருந்தால் எமது ஆன்மிக கலாசார பண்பாட்டு விழுமியங்களையும் சுய மரியாதையையும் பாதுகாத்துக் கொள்ள முடியும்' என்றார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .