2025 மே 01, வியாழக்கிழமை

கட்டட திறப்பு விழாவும், பரிசளிப்பு விழாவும்

Kanagaraj   / 2014 மே 25 , மு.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}



-எம்.எம்.அனாம்

ஓட்டமாவடி சரீப் அலி வித்தியாலயத்தின் இரு மாடிக்கட்டடத் திறப்பு விழாவும், முதலாவது பரிசளிப்பு விழாவும் சனிக்கிழமை(24) வித்தியாலய முன்றலில் இடம்பெற்றது.

வித்தியாலய அதிபர் எச்.எம்.சாமு சஹாப்தீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் ஐம்பது லட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட  நான்கு வகுப்பறைகளைக் கொண்ட இரு மாடிக் கட்டடம் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வின் போது பாடசாலையில் சிறந்து விளங்கிய 103 மாணவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் மாணவர்களது கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, ஓய்வுபெற்ற ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.சுபைர், ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.ரீ.எம்.நஜீப்கான், ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் ஐ.ரீ.அஸ்மி மற்றும் பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.










You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .