2025 மே 01, வியாழக்கிழமை

மாடியிலிருந்து தவறி வீழ்ந்து வயோதிபர் பலி

Kogilavani   / 2014 மே 26 , மு.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்,ஏ.எச்.ஏ.ஹுஸைன்,எஸ்.ரவீந்திரன்

மட்டக்களப்பு, போதனா வைத்தியசாலையின் கண் சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த வயோதிபர் ஒருவர் 1 ஆம் மாடியிலிருந்து தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் எம்.எஸ்.இப்றாலெவ்வை தெரிவித்தார்.

இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இரவு (25) இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு, கன்னங்குடாவைச் சேர்ந்த 80 வயதுடைய கணபதிப்பிள்ளை என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வயோதிபர்,  யன்னல் வழியாக வெளியேற முற்பட்டபோதே  குறித்த மரணம் சம்பவித்துள்ளதாக   மேலும் தெரிய வருகின்றது. இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .