2025 மே 01, வியாழக்கிழமை

ஐ.ம.சு.மு உறுப்பினர் இராஜினாமா: இனிய பாரதி நியமனம்?

Kanagaraj   / 2014 மே 27 , மு.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

கிழக்கு மாகாண சபை ஐக்கிய மக்கள் சுதந்தி முன்னணியின் உறுப்பினர் துரையப்பா நவரெட்ணராஜா தனது மாகாண சபை உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

அவர் தனது இராஜினாமா கடிதத்தை கிழக்கு மாகாண பேரவைச் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இவரது இராஜினாமாவையடுத்து கிழக்கு மாகாண சபையில் வெற்றிடமொன்று தோன்றியுள்ளதாக கிழக்கு மாகாண பேரவைச் செயலாளர் எம்.சீ.எம்.சரீப் தேர்தல் ஆணையாளருக்கும் தெரிவித்துள்ளார்.

கடந்த கிழக்கு மாகாண சபையில் இவர் விவசாய கால் நடை அபிவிருத்தி அமைச்சராக செயல் பட்டு வந்துள்ளதுடன் கடந்த 2012 ஆம் ஆண்டு இடம் பெற்ற மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்;டமைப்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்திருந்தர்.

ஐக்கிய மக்கள் சுதந்தி கூட்டமைப்புக்கு கிடைத்த போனஸ் ஆசன மூலம் இவர் மீண்டும் கிழக்கு மாகாண சபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத் தக்கது.

இந்நிலையில் இவரது வெற்றிடத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் இனிய பாரதி கிழக்கு மாகாண சபை உறுப்பினராக நியமிக்கப்படவுள்ளதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .