2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

போதைப்பொருள், மது ஒழிப்பு வாரம்; விழிப்புணர்வுச் செயலமர்வு.

Suganthini Ratnam   / 2014 மே 27 , மு.ப. 08:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மாணிக்கப்போடி சசிகுமார்


போதைப்பொருள் மற்றும் மது ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு வவுணதீவு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு அலுவலகத்தில்  விழிப்புணர்வூட்டும் செயலமர்வு நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.

வவுணதீவு சுகாதார வைத்திய அதிகாரி வி.கலைச்செல்வி தலைமையில் நடைபெற்ற இச்செயலமர்வில்;, போதைப்பொருள் மற்றும் மதுப் பாவனையால் பொருளாதாரத்தில் ஏற்படும் பாதிப்பு உள்ளிட்ட தீமைகள் பற்றி விளக்கமளிக்கப்பட்டன.

இச்செயலமர்வில் 60 இற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

இதில் சிரேஷ்ட பொதுச் சுகாதாரப் பரிசோதகர் விமலசேகரம், உளநல சமூக உத்தியோகத்தர் தவேந்திரன், பொதுச் சுகாதார பரிசோதகர் தயாளன், தாதிய மேற்பார்வை உத்தியோகத்தர்  ஜெயந்தி கலாதேவன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X