2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வருமான நிலுவைகளை சேகரிக்கும் மாதம் மட்டக்களப்பில் பிரகடனம்

Kogilavani   / 2014 ஜூன் 04 , மு.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாநகர சபை இந்த ஜுன் மாதத்தில் மாநகர சபையின் வருமான நிலுவைகளை சேகரிக்கவுள்ளதாக மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் எம்.உதயகுமார் தெரிவித்தார்.

இதற்காக இந்த மாதம் வருமான நிலுவைகளை சேகரிக்கும் மாதமாக மட்டக்களப்பு மாநகர சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இதில்; முதல் கட்டமாக வரியிறுப்பாளர்களுக்கும் வியாபாரிகளுக்கும் அறிவுறுத்தல் வழங்கும் துண்டுப்பிரசுரங்கள் செவ்வாய்க்கிழமை(3) வழங்கப்பட்டன.

இந்த துண்டுப் பிரசுரங்கள் வழங்கும் நடவடிக்கையினை மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் ஆரம்பித்து வைத்தார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் தெரிவித்த அவர்,

'மட்;டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட சகல வட்டாரங்களிலும் சோலைவரி நிலுவையையும், வியாபார மற்றும் ஏனைய வரிகளின் நிலுவைகளுமாக 100 மில்லியன் ரூபா உள்ளது.

இதனை சேகரிப்பதற்காக மட்டக்களப்பு மாநகர சபை இந்த திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த வரிஅறவீடும் செய்யும் திட்டத்தின் கீழ் இந்த மாதத்தின் முதலாம் வாரத்தில் மக்களுக்க விழிப்பூட்டும் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது.

இரண்டாம், மூன்றாம் வாரங்களில் வீடு வீடாகவும் வியாபார நிலையங்களுக்கு சென்று வரிகள் அறவீடு செய்யப்படவுள்ளன.

4ஆம் வாரத்தில் ஆதனவரி நிலுவைகள் உள்ள பிரதேசங்களில் மாநகர சபை கட்டளைச் சட்டம் 252 வது பிரிவிற்கிணங்க வரியிறுப்பாளர் ஒருவர் தொடர்ச்சியாக வரிசெலுத்த தவறியிருப்பின் அவரின் வீட்டிலுள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு நடுக்கட்டு நடவடிக்கை மூலம் பகிரங்க ஏலத்தில் விட்டு வரி அறவீடு செய்யப்படும்.

இதேவேளை தொடர்ச்சியாக 10 வருடமாக 10 வீத கழிவுடன் வரிசெலுத்திய வரியிறுப்பாளர்களை பாராட்டி கௌரவிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது'  என மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் எம்.உதயகுமார் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X