2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

குருதி நன்கொடையாளர்கள் கௌரவிப்பு

Kanagaraj   / 2014 ஜூன் 04 , பி.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்
,தேவ அச்சுதன்

மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையின் இரத்த வங்கிக்கு இரத்ததானம் செய்த குருதி நன்கொடையாளர்கள் இன்று (4) கௌரவிக்கப்பட்டனர்.

மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையின் இரத்த வங்கியின் ஏற்பாட்டில் வைத்திய சாலை மண்டபத்தில் இந்த வைபவம் நடைபெற்றது.

வைத்திய சாலையின் இரத்த வங்கியின் பொறுப்பதிகாரி டாக்டர் திருமதி அனோஜா ஹேரத் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில்,வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் எம்.எஸ்.இப்றாலெவ்வை, மற்றும் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் டாக்டர் எஸ்.சதுர்முகம், போதனா வதை;திய சாலையின் பிரதி பணிப்பாளர் டாக்டர் திருமதி எல்.எம்.டி.நவரட்னராஜா மற்றும் கிழக்கு பலக்லைக்கழக மருத்துவ பீடத்தின் பீடாதிபதி டாக்டர் கே.பி.சுந்தரேசன், கிழக்கு பல்கலைக்கழக விஞ்ஞான மருத்துவ பீடத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் மகப்பேற்று வைத்திய நிபுணர் டாக்டர் கே.இ.கருணாகரன் உட்பட வைத்திய நிபுணர்கள், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்திய சாலை இரத்த வங்கி வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள், குருதி நன்கொடையாளர்கள் தேசிய இரத்த வங்கியின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
 
இதன் போது வைத்திய சாலையின் இரத்த வங்கிக்கு இரத்த தானம் வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்த ஏற்பாட்டாளர்கள் 42 பேர் மற்றும் இரத்ததானம் செய்த 32 நிறுவனங்கள் உட்பட குருதி நன்கொடையாளர்கள் இதன் போது நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

உலக இரத்ததான தினம் ஜுன் 14ம் திகதி அனுஸ்டிக்கப்படுவதையொட்டி இந்த வைபவம் நடைபெற்றது.
இந்த வைபவத்தின் ஆரம்பத்தில் அதிதிகள் மற்றும் குருதி நன்கொடையாளர்கள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X