2025 மே 01, வியாழக்கிழமை

பாடசாலைகளில் ஐஸ்பழம், சொக்லட் போன்றவற்றை விற்க வேண்டாமெனக் கோரிக்கை

Suganthini Ratnam   / 2014 ஜூன் 05 , மு.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடியிலுள்ள பாடசாலைச் சிற்றுண்டிச்சாலைகளில் ஐஸ்பழம் மற்றும் சொக்லட் போன்ற உணவுப் பொருட்களை மாணவர்களுக்கு விற்பனை செய்ய வேண்டாம் என்று பாடசாலை நிர்வாகங்களை காத்தான்குடி சுகாதார அலுவலகம் கடந்த வாரம்  கேட்டுக்கொண்டதாக காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீன் தெரிவித்தார்.

பாடசாலைச் சிற்றுண்டிச்சாலைகளின்; உரிமையாளர்களுக்கு இது தொடர்பில் ஏற்கெனவே  அறிவுறுத்தப்பட்டன. இருப்பினும், சில பாடசாலைகளில் ஐஸ்பழம் மற்றும் சொக்லட் போன்றவை மாணவர்களுக்கு விற்பனை செய்வதாக அறியக்கிடைத்துள்ளது.

இவ்வாறான பாடசாலைச் சிற்றுண்டிச்சாலைகளின்  உரிமையாளர்கள் மற்றும் இதற்கு அனுமதியளிக்கும் அதிபர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் சட்ட  நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

மேலும், காத்தான்குடியிலுள்ள பாடசாலைச் சிற்றுண்டிச்சாலைகள் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. இங்குள்ள பெண்கள் பாடசாலையொன்றின் சிற்றுண்டிச்சாலையில் மேற்படி உணவுப் பொருட்களை விற்பனை செய்தமைக்காக சிற்றுண்டிச்சாலையை புதன்கிழமை (04)  மூடுவதற்கு பணித்ததாகவும் அவர் கூறினார்.

பாடசாலைச் சிற்றுண்டிச்சாலைகளில் ஐஸ்பழம், சொக்கலட், டொபி போன்றவற்றை  விற்பனை செய்வதையும் தினமும் பராட்டா ரொட்டி விற்பனை செய்வதையும் தவிர்த்துக்கொண்டு, பயறு மற்றும் கடலை  போன்ற உணவுகளை விற்பனை செய்யுமாறு அறிவுறுத்தியிருந்ததாகவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .