2025 மே 01, வியாழக்கிழமை

நாளாந்தம் காலை உணவு உட்கொள்ளாமல் வரும் மாணவர்கள்

Kanagaraj   / 2014 ஜூன் 07 , மு.ப. 08:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்


கரடியனாறு மகாவித்தியாலயத்தில் நாளாந்தம் 240 மாணவர்கள் காலை உணவு உட்கொள்ளாமல் வருவதாக அப்பாடசாலை அதிபர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சி.சந்திரகாந்தன் கரடியனாற்றுக்கு நேற்றயதினம் மேற்கொண்ட  விஜயத்தின்போதே பாடசாலை அதிபர் அவரிடம் இதனை தெரிவித்தார்.

மேலும் மக்களுடனான சந்திப்பின்போது பல கோரிக்கைகள் அவரிடம் அப்பகுதி மக்கள் முன்வைத்தனர். அக்கிராம மக்களுக்கு வீடமைப்பு  தேவையாக உள்ளது.

தற்போதும் அரச சார்பற்ற நிறுவனங்களினால் வழங்கப்பட்ட தற்காலிக கூடாரத்திலே வசித்து வருகின்ற இவர்கள், ஒரே வீட்டில் திருமண வயது வந்த நான்கு ஐந்து பெண் பிள்ளைகளுடனும் சாதரண தரம் மற்றும் உயர்தரம் படிக்கும் மாணவர்களுடனும் அவ்வீட்டிலே இருப்பதையும் அக்கூடாரமும் பழுதடைந்த நிலையிலே இருப்பதையும் நேரடியாகப் பார்வையிட்டார் .

 மேலும் அக்கிராமத்திற்கு மின்சாரம், வீதிகள், தபால் நிலையம், பஸ் தரிப்பிடம் பேhன்றன அடிப்படை தேவையாக உள்ளதாகவும் மக்களால் கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.
 
பாடசாலை அதிபரின் கோரிக்கைக்கு இணங்க கரடியனாறு மகா வித்தியாலய பாடசாலை மைதானத்தை புனரமைப்பதற்காக ஜனாதிபதி ஆலோசகரினால் நிதி ஒதுக்கீடும் வழங்கிவைக்கப்பட்டது.
 
அத்தோடு கிராம மக்களின் சில அடிப்படை தேவைகள்  நிறைவேற்றப்பட்டதோடு,விவசாயிகளின் கோரிக்கைகளையும் நடைமுறைப்படுத்துவதற்கு  உடன் நடவடிக்கையும் எடுக்கப்பட்டன.
 
இவ்விஜயத்தின் பொது  தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன்,  தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உதவிச் செயலாளரும் முன்னாள் வவுணதீவு பிரதேச சபை உப தவிசாளர்  ஜெ.ஜெயராஜ் மற்றும் கிராம சேவையாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .