2025 மே 01, வியாழக்கிழமை

சர்வமத மற்றும் சர்வ இன அமைப்பின் நிர்வாகக் கூட்டம்

Kanagaraj   / 2014 ஜூன் 07 , மு.ப. 09:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்

 
தேசிய சமாதானப் பேரவையின் அனுசரணையுடன் மட்டக்களப்பு கரிதாஸ் எகட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற, மட்டக்களப்பு மாவட்ட சர்வமத மற்றும் சர்வ இன அமைப்பின் (DIRC) நிர்வாகக் கூட்டம் மட்டக்களப்பில் நேற்று(06) மாலை நடைபெற்றது.

தேசிய சமாதானப் பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட சர்வமத அமைப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் சமூக ரீதியிலும் மத ரீதியிலும் இடம்பெறுகின்ற பிரச்சனைகள் தொடர்பில் பல  வெளிக்கொணர்வுகளை மேற்கொண்டுள்ளது.

அந்த வகையில் மட்டக்களப்பு சாள்ஸ் மண்டபத்தில் சர்வமத அமைப்பின் ஒன்று கூடல் நிகழ்வு மாவட்ட சர்வமத மற்றும் சர்வ இன அமைப்பின் தலைவர்களான அருட்தந்தை கிறைற்றன் அவுட்ஸ்கோன் மற்றும் சிவஸ்ரீ சிவபாலன் குருக்கள் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில்; மட்டக்களப்பு சிவில் சமூக அமைப்பின் தலைவர் எஸ். மாமாங்கராஜா, மத்தியஸ்த சபைத் தலைவர் எஸ். விஸ்னுமூர்த்தி ஆகியோருடன் மாவட்டத்தைச் சேர்ந்த இந்து முஸ்லீம் கிறிஸ்தவ சமயத்தினைச் சேர்ந்த மட்டக்களப்பு மாவட்ட சர்வ மத அமைப்பின் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மட்டக்களப்பு நகர் பிரதேசங்களில் அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் வீட்டு கழிவு நீர் வீதி வடிகான்களுக்குள் செல்வதனை தடுக்கும் முகமாக பொலிஸார் நடவடிக்கை மேற்கொள்வதால் பொது மக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாவது பற்றியும் மற்றும் மட்டக்களப்பு நகர் வீதியோரங்களில் ஏற்படும் வாகன தரிப்புகளினால் நெரிசல் காரணமாக பொதுமக்களும் சாரதிகளும் பாதிக்கப்படுவது தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

அத்துடன், மட்டக்களப்பு நகரில் பாவனைக்குதவாத பொருட்கள் விற்பனை செய்யப்படுவதால் அதனால் மக்கள் பாதிக்கப்படுவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டு இது தொடர்பில் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவரப்படுதல் தொடர்பாக ஆரயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .