2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மீளாய்வுக் கூட்டம்

Suganthini Ratnam   / 2014 ஜூன் 08 , மு.ப. 08:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்ட ரீதியான தொழில்நுட்ப பயிற்சியின்  மீளாய்வுக் கூட்டம் மட்டக்களப்பு தொழில்நுட்பக் கல்லூரியில் சனிக்கிழமை (7) நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தொழில் பயிற்சி மற்றும் தொழில்நுட்ப பயிற்சியை  வழங்கும் அரச நிறுவனங்களுக்கு தேவையான ஆளணியை வழங்குவதற்காக பிரதேச  செயலக ரீதியாக நியமிக்கப்பட்டுள்ள திறன் அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களுக்கும் மனிதவள அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களுக்கும் கடந்த 06 மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்ற அறிக்கை தொடர்பான மீளாய்வுக் கூட்டமே நடைபெற்றது,

மட்டக்களப்பு மாவட்ட உதவி மாவட்டச் செயலாளார் எஸ்.ரங்கநாதன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மட்டக்களப்பு தொழில்நுட்பக் கல்லூரி அதிபர் ரி.ரவிச்சந்திரன், மட்டக்களப்பு தொழில்நுட்பக் கல்லூரியின் பிரதி அதிபரும் மாவட்ட தொழில்நுட்ப கல்வி வழங்கும் நிறுவன சம்மேளனத் தலைவருமான ச.தியாகராசா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது கடந்த 06 மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்ற அறிக்கை தொடர்பில்  கலந்துரையாடப்பட்டதாக மட்டக்களப்பு தொழில்நுட்பக் கல்லூரியின் பிரதி அதிபர் ச.தியாகராசா தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X