2025 மே 01, வியாழக்கிழமை

பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கான பயிற்சிகள்

Kanagaraj   / 2014 ஜூன் 08 , மு.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன்


மட்டக்களப்பு கல்வி வலயத்திலுள்ள 75 முன்பள்ளி பாலர்; பாடசாலை ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் வழங்கும் நிகழ்வுகள் பயனியர் வீதியிலுள்ள வண்ணத்துப் பூச்சிகள் சமாதானப் பூங்காவில் சனிக்கிழமை (07) இடம்பெற்றன.

வண்ணத்துப் பூச்சிகள் சமாதானப் பூங்காவின் ஸ்தாபகர் அருட்தந்தை போல் சற்குணநாயகம் வளிகாட்டலின் கீழ் ஓவியர் ஈ. குலராஜ் அவர்களின் தலைமையில் பயிற்சியாளர்களான க. தேவகாந்தன்,  இ. அமுதவர்சனி ஆகியோர் பயிற்சிகளை வழங்கினர்.

இதல் கழிவுப் பொருட்களைக் கொண்டு கலைப் பொருட்களை உருவாக்கல், கலை வர்ணங்களினூடாக மனதை ஒரு நிலைப்படுத்துதல், புதிய ஆக்கம், உருவாக்கல், சொந்த திறனை விருத்தி செய்தல் மற்றும் மீள் உருவாக்கம் போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டன.

மட்டக்களப்பு . வாழைச்சேனை, மாவடிவேம்பு மற்றும்  கல்முனையில்; ஆகிய இடங்களில் உள்ள உளநலப் பிரிவு தாதியர்கள், உத்தியோகத்தர்களுக்கு ஏற்கெனவே பயிற்சிகள் வழங்கப்பட்டதாக அருட்தந்தை தெரிவித்தார்.

இதேவேளை ,மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள இளம் குற்றவாளிகளுக்கும் மாதம் இருமுறை இப்பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .