2025 மே 01, வியாழக்கிழமை

பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் மட்டு. கிளைக்கு புதிய நிர்வாகிகள்

Suganthini Ratnam   / 2014 ஜூன் 09 , மு.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தினுடைய மட்டக்களப்பு மாவட்டக் கிளைக்கான  புதிய நிர்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை (08) தெரிவுசெய்யப்பட்டனர்.

மட்டக்களப்பு கிறீன் கார்டன் ஹோட்டலில் வருடாந்த ஒன்றுகூடல் நடைபெற்றது.  இதன்போது, பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டக் கிளைத் தலைவராக எஸ்.கிருஸ்ணப்பிள்ளை,  செயலாளராக கே.ஜெய்சங்கர், பொருளாளராக என்.கிருனவன்,  உபதலைவர்களாக எம்.பசீர், ஏ.கே.திஸ்ஸவீரசிங்க, உபசெயலாளராக ஆர்.ராஜ்குமார் உட்பட 15 நிர்வாக உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டனர்.

இந்த ஒன்றுகூடலில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் கே.கருணாகரன், கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் டாக்டர் எஸ்.முருகானந்தம், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் டாக்டர் எஸ்.சதுர்முகம், மீள்குடியேற்ற பிரதியைமச்சரின் இணைப்புச் செயலாளர் பொன் ரவீந்திரன் உட்பட  பலர் கலந்துகொண்டனர்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .