2025 மே 01, வியாழக்கிழமை

இளைஞனின் சடலம் மீட்பு

Kanagaraj   / 2014 ஜூன் 09 , மு.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியபோரதீவு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து நேற்று(08) ஞாயிற்றுக்கிழமை மாலை இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் பெரியபோரதீவு, மாணிக்கவாசகர் வீதியில் வசிக்கும் இராசலிங்கம் சங்கரப்பிள்ளை(30) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து குறித்த இளைஞனின் வீட்டில் இருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .