2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

சரத் சமரவீரவை காணவில்லை; ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஹப்புத்தளை பெண் சாட்சி

Menaka Mookandi   / 2014 ஜூன் 09 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


ஹப்புத்தளையைச் சேர்ந்த பெண்ணொருவர், தனது கணவரான சரத் சமரவீரவை காணவில்லை என மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (08) நடைபெற்ற காணாமல் போனோரை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்தார்.

ஹப்புத்தளையைச் சேர்ந்த ஏ.பத்மா என்ற பெண்ணே, தனது கணவர் தொடர்பில் முறைப்பாட்டை பதிவு செய்ததன் பின்னர் ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளித்தார்.

தனது கணவரான சரத் சமரவீர, கடந்த 1990ஆம் ஆண்டு இனந்தெரியாதோரினால் கடத்தப்பட்ட நிலையில் காணாமல் போனார் என ஆணைக்குழுவின் முன் தெரிவித்தார்.

இது தொடர்பான உரிய தகவல்களை ஆணைக்குழுவுக்கு வழங்குமாறு, ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி மெகஸ்வல் பராக்கிரம பரணகம அப்பெண்ணிடம் கூறினார்.

இதையடுத்து குறித்த பெண் அணைக்குழு ஆதிகாரிகளிடம் தனது கணவர் காணாமல் போன விடயத்தைக் கூறி முறைப்பாட்டைப் பதிவு செய்துகொண்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X