2025 மே 01, வியாழக்கிழமை

'போதைப்பொருள் பாவனையற்ற சமூகத்தை உருவாக்குவோம்' பேரணி

Suganthini Ratnam   / 2014 ஜூன் 09 , மு.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்


போதைப்பொருள் பாவனையற்ற சமூகத்தை உருவாக்கி வறுமைக்கு முற்றுப்புள்ளி வைப்போம் எனும் கருப்பொருளில்  பேரணியொன்று மட்டக்களப்பு மாவட்டத்தின்  போரதீவுப்பற்று பிரதேசத்தில் திங்கட்கிழமை (09) நடைபெற்றது.

போரதீவுப்பற்று பிரதேசத்திலுள்ள சமுர்த்தச் சங்கங்கள் ஒன்றிணைந்து இப்பேரணியை ஏற்பாடு செய்தது.

கோவில் போரதீவு சந்தியிலிருந்து ஒரு பிரிவினரும் வெல்லாவெளிச் சந்தியிலிருந்து மற்றுமொரு பிரிவினருமாக  போதைப்பொருளுக்கு எதிரான கருத்துக்களை கொண்ட  பதாகைகளை  ஏந்தியவாறு  பேரணியாக போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தை அடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து, போரதீவுப்பற்று   பிரதேச செயலாளர் என்.வில்வரெத்தினத்திடம் சமுர்த்தி சங்கங்களின் பிரதிநிதிகள் மகஜரொன்றைக் கையளித்தனர்.

'புகைப்பிடித்து உடலை எரிக்காதே', 'உங்கள் சிகரெட் என்னைக் கொல்கிறது', 'சிகரெட் பாவனை உன்னைச் சீரழிக்கும்', 'போதைப்பொருட்கள் எம்மையும் எம்மைச் சூழவுள்ளோரையும் கொஞ்சம் கொஞ்சமாக கொல்லும்' உள்ளிட்ட பல வாசகங்கள் இவர்கள் தாங்கிய பதாகைளில் எழுதப்பட்டிருந்தன.

அம்மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'எங்களது பிரதேசத்தில் போதைப்பொருள்; பாவனை அதிகமாக உள்ளமையால் இதைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும்   புதிதாக மதுபானச்சாலைகளுக்கு  அனுமத்திப்பத்திரங்கள்  வழங்குவதை தடுக்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .