2025 மே 01, வியாழக்கிழமை

விபத்து : ஒருவர் பலி, மற்றுமொருவர் படுகாயம்

Kanagaraj   / 2014 ஜூன் 09 , பி.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சத்துருக்கொண்டான் பிரதேசத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளதாக மட்டக்களப்புப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் பலியானவர் சின்னஊறணியைச் சேர்ந்த பெரியதம்பி ரவீந்திரன் கிருஷ்ணப்பிள்ளை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு - கொழும்பு பிரதான வீதியில் இன்று(09) மாலை இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

ஏறாவூரில் இருந்து மட்டக்களப்பை நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டியும் சத்துருக்கொண்டானிலிருந்து வந்து கொண்டிருந்த துவிச்சக்கர வண்டியும் மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் கூறினர்.

விபத்தில் படுகாயமடைந்த ஏறாவூர் ஓடாவியார் வீதியைச் சேர்ந்த எம். அப்துல்றஸ்ஸாக் (40) என்பவர் தொடர்ந்து சிக்கிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை தகவல்கள் குறிப்பிடுகின்றன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .