2025 மே 01, வியாழக்கிழமை

விழிப்புணர்வு வாரம்

Kanagaraj   / 2014 ஜூன் 10 , மு.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


 -எம்.ரீ.எம்.பாரிஸ்
 
ஜூன் 12 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள சர்வதேச சிறுவர் உழைப்பு ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, ஜூன் 09 ஆம் திகதி தொடக்கம் 15 ஆம் திகதி வரை சிறுவர் உழைப்பிற்கு எதிரான தேசிய  வாரமாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது.
 
இதனை முன்னிட்டு, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் அனுசரணையில், மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் சிறுவர் துஷ்பிரயோக நடவடிக்கையினை தடுப்பதற்கான விழிப்புட்டும் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
 
'சிறுவர் தொழிலாளர்கள் அற்ற சமூகத்தினை கட்டியொழுப்ப ஒன்று படுவோம்' எனும் தலைப்பிலான விழிப்புட்டும் நிகழ்வு கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலாளர் அலுவலகத்தில் திங்கட்கிழமை(09) இடம் பெற்றது.

கோறளைப்பற்று மேற்கு  பிரதேச செயலகத்தின் சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்தி பிரிவு இந்நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது.

பிரதேச செயலாளர் எம்.சீ.அன்சார் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகள், இராணுவத்தினர்;, கிராமிய சிவில் சமூக சிறுவர் பாதுகாப்பு அமைப்புக்களின் அங்கத்தவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
 
இதன் போது சிறுவர் பாதுகாப்பு விடயம் பற்றியும்,அதன் அவசியம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .