2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

மட்டக்களப்பு தமிழ் சங்கத்தின் செயற்குழு ஒன்றுகூடல்

Kanagaraj   / 2014 ஜூன் 14 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


மட்டக்களப்பு தமிழ்சங்கத்தின் விசேட செயற்குழு ஒன்றுகூடல் நேற்றைய தினம் மாலை தமிழ் சங்கத்தின் தலைவர் எஸ்.எதிர்மனசிங்கம் தலைமையில் நடைபெற்றது.

இவ் ஒன்றுகூடலில் தமிழ்சங்கத்தின் செயலாளர் கே.தபராஜா, பொருளாளர் பிரபல வர்த்தகர் எஸ்.ரஞ்சிதமூர்த்தி, முன்னாள் தலைவர் பேராசிரியர் எம்.செல்வராசா, ஆலோசகர் பேராசிரியர் சி.மௌனகுரு மற்றும் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது தமிழ்சங்கத்தின் எதிர்கால செயற்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் சங்கத்திற்கான கட்டிடம் அமைப்பது தொடர்பிலும் ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பழம்பெரும் தமிழ் தொண்டர்கள் இலக்கியவாதிகளின் வராலாறுகளை என்றென்றும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கச் செய்யும் பணிகளிலும் தமிழ் சங்கம் அளப்பரிய சேவையாற்றி வருகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மொழி, கலாச்சாரம், இலக்கியம் பண்பாடு போன்றவற்றினைப் பேணுவதில் மட்டக்களப்பு தமிழ் சங்கம் பாரிய பங்காற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X