2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

இடர்களுக்குத் தாக்குப் பிடிக்க முதலுதவிப் பயிற்சி

Kogilavani   / 2014 ஜூன் 18 , மு.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஏ.எச்.ஏ. ஹுஸைன்


எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய இடர்களிலிருந்து தாக்குப் பிடிக்கக் கூடியதாக அதிகாரிகளையும் அதனூடாக கிராம மக்களையும் தாம் தயார்படுத்தி வருவதாக ஹென்டிகப் இன்டநேஷனல் நிறுவனப் பிரதிநிதி குணரெட்ணம் முரளீதரன் தெரிவித்தார்.

ஏறாவூர்ப்பற்று செங்கலடிப் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கிராமங்களில் கடமையாற்றும் கிராம சேவையாளர்களுக்கும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்குமான முதலுதவிப் பயிற்சி நெறியொன்று செவ்வாய்க்கிழமை (17) செங்கலடிப் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

ஹென்டிகப் இன்டநேஷனல் (ர்யனெiஉயி ஐவெநசயெவழையெட) நிறுவனத்தின் அனுசரணையுடன் இடம்பெற்ற இந்த முதலுதவிப் பயிற்சியில் கிராம சேவையாளர்கள் 24 பேரும், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் 16 பேருமாக மொத்தம் 40 பேர் பங்குபற்றினர்.

நிகழ்வில் ஏறாவூர்ப் பற்று செங்கலடிப் பிரதேச செயலாளர் யூ.உதயஸ்ரீதர், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.கெங்காதரன், ஹென்டிகப் இன்டநேஷனல் நிறுவனப் பிரதிநிதிகளான எம்.பகீரதன் மற்றும் குணரெட்ணம் முரளீதரன், இலங்கை செஞ்சிலுவைச் சங்க மட்டக்களப்புக் கிளைத் தலைவர் ரீ.வசந்தராஜா உள்ளிட்டோரும் எனைய அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

தொடராகவும் கட்டங்கட்டமாகவும் இடம்பெற்று வந்த இந்தப் பயிற்சி நெறியின் இறுதியில் பிரதேச செயலகத்திலுள்ள அனர்த்த முகாமைத்துவ அலகிற்கு சுமார் 2 இலட்ச ரூபாய் பெறுமதியான உயிர்காப்பு அங்கி , தேடல் விளக்கு, மெகா தொலைபேசி, முதலுதவிப் பெட்டி உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை சுமார் 4 இலட்சம் ரூபாய் பெறுமதியான நோயாளர் இருக்கைத் தள்ளுவண்டிகள்,   மழைகாப்பு அங்கிகள், காலணிகள்,  முதலுதவிப் பெட்டிகள், கூடாரம், உணவுப் பாத்திரங்கள், மருந்துகள், தேடல் விளக்குகள், தொடர்பாடல் உபகரணங்கள்  என்பன கிராமிய அனர்த்த முகாமைத்துவ காப்பு அமைப்பிற்கு வழங்கப்படவுள்ளதாகவும் ஹென்டிகப் இன்டநேஷனல் நிறுவனப் பிரதிநிதி குணரெட்ணம் முரளீதரன் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மொத்தம் 16 கிராமிய அனர்த்த முகாமைத்துவ காப்பு அமைப்புக்களுக்கு தாங்கள் இந்தவகைப் பயிற்சிகளையும் அனர்த்த முகாமைத்துவ காப்பு உபகரணத் தொகுதிகளையும் வழங்கவிருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X