2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

பிரதேச செயலகங்கள் தோறும் சமாதான மாநாடு

Menaka Mookandi   / 2014 ஜூன் 18 , மு.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


நாட்டில் இன ஐக்கியத்தையும் சகவாழ்வையும் வலுப்படுத்தும் வகையில் சகல சமூகங்களின் சமூகத் தலைவர்களை ஒன்றிணைத்து சகவாழ்வும் சமாதானத்துக்குமான கலந்துரையாடல்களை நடத்துமாறு பொது நிர்வாக அமைச்சு பணிப்புரை விடுத்துள்ளது.

அதற்கமைவாக மட்டக்களப்பு அரசாங்க அதிபரின் அவசர உத்தரவின் பேரில் கூட்டப்பட்ட விஷேட சமாதானக் கலந்துரையாடால் இன்று புதன்கிகழமை (18), ஏறாவூர் நகர, பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.. ஹனீபா தலைமையில் இடம்பெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எச்.டி.எஸ். துசித்த குமார பண்டார தென்னக்கோன், மட்டக்களப்பு இராணுவ அதிகாரி மேஜர் ஆர்.எம்.வி.ரத்நாயக்க, உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.றமீஷா, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள சிவில் பாதுகாப்புக் குழுக்களின் பிரதிநிதிகள், கிராம சேவையாளர்கள், மதத் தலைவர்கள், சமூக சேவை அமைப்புக்கள் மற்றும் உதவி நிறுவனங்களின் பிரதிநிதிகள், ஊர்ப் பிரமுகர்கள், அதிகாரிகள் என ஏராளமானோர் இந்த அவசர ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X