2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

விபத்தில் மாணவனின் கால் முறிந்தது

Suganthini Ratnam   / 2014 ஜூன் 18 , மு.ப. 07:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

காத்தான்குடி பொலிஸ் பிரிவில் இன்று புதன்கிழமை  காலை இடம்பெற்ற விபத்தில் வலது கால் முறிந்த மன்னாரைச் சேர்ந்தவரான   கல்லடி விபுலாநந்தா இசை நடனக் கல்லூரியின் நாடகமும் அரங்கியலும் பிரிவில் இரண்டாம் வருட மாணவனான கே.ஸ்ரீபிரியன் (வயது 19) என்பவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக  காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

கல்லடி விபுலாநந்தா இசை நடனக் கல்லூரிக்கு முன்பாகவுள்ள வீதியை இம்மாணவன் கடந்தபோது,  எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியதாகவும் பொலிஸார் கூறினர்.

மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்தவரிடம்  காத்தான்குடி பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X