2025 மே 01, வியாழக்கிழமை

பாடசாலை சோலார் கருவியும் மின்கலங்களும் திருட்டு

Kogilavani   / 2014 ஜூன் 18 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஐயங்கேணி ஹிஸ்புல்லாஹ் வித்தியாலத்தில் பொருத்தப்பட்டிருந்த சோலார் மின் பிறப்பாக்கியும் மின் கலங்களும் திருட்டுப் போயுள்ளதாக பாடசாலை அதிபர் எச்.எம்.எம்.பஷீர் பொலிஸில் முறையிட்டுள்ளார்.

வழமைபோன்று தான் செவ்வாய்க்கிழமை(17) பாடசாலையை மூடிவிட்டு வந்ததாகவும் புதன்கிழமை(18) காலை பாடசாலையைத் திறந்து பார்த்தபோது  சோலார் மின்பிறப்பாக்கிக் கருவியும் மின் கலங்;களும் திருடப்பட்டிருந்தமை  தெரியவந்ததாகவும் அவர் பொலிஸில் முறையிட்டுள்ளார்.

மட்டக்களப்பு அனர்த்த முகாமைத்துவப் பிரிவினால் இந்த சோலார் மின்பிறப்பாக்கி கருவி 90 ஆயிரம் ரூபாய் செலவில் பொருத்தப்பட்டது என்றும் பாடசாலை அதிபர் தெரிவித்தார்.

இச்சம்பவம் குறித்து ஏறாவூர் பொலிஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

இதே பாடசாலையில் இதற்கு முன்னரும் பாடசாலையின் கதவுகள் மற்றும் உலக உணவுத் திட்டத்தினால் வழங்கப்பட்ட பாத்திரங்கள் இரண்டு தடவைகள் களவாடப்பட்டிருந்ததாகவும் பாடசாலை அதிபர் எச்.எம்.எம்.பஷீர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .