2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

தமிழ்-முஸ்லிம் மக்களின் ஒற்றுமையை குலைப்பதற்கு முயற்சி

Kogilavani   / 2014 ஜூன் 20 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.ருத்திரன்

 'அளுத்கம சம்பவத்தை திசை திருப்புவதற்காக அரசாங்கம் மற்றும் பொதுபல சேனா ஆகியவற்றிக்கு சார்பாக இருக்கும் சிலர் தமிழ் முஸ்லிம் மக்களின் ஒற்றுமையை குலைப்பதற்கு திரை மறைவில் சதிவேலைகளை செய்து  கொண்டிருப்பதை அறியக்கூடியதாகவுள்ளது' என்று தமிழ்தேசியக் கூட்டமைப்பின மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ப.அரியநேத்திரன் வியாழக்கிழமை (20) தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

'அளுத்கம பேருவளையில் இடம்பெற்ற கலவரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிம் மக்கள் தங்களது சமூகத்தின் சார்பாக தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தும் முகமாக ஹர்த்தால் அனுஷ்டிப்பது நியாயமானது.

ஆனால், வியாழக்கிழமை(20) மட்டக்களப்பில் மேற்கொள்ளப்பட்ட ஹர்த்தாலின்போது வாழைச்சேனை மற்றும் காரைதீவு பிரதேச தமிழ் கிராமங்களில் புகுந்து தமிழ் மக்கள் மீதும் அவர்களது வாகனங்கள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இச்சம்பவங்களினால் எமது மக்கள் கவலையடைந்து காணப்படுகிறார்கள். தமிழ் மக்கள் முஸ்லிம் மக்;கள் மீது கொண்டிருந்த புரிந்துணர்வின் அடிப்படையிலேயே மேலும் ஒரு தமிழ் முஸ்லிம் குழப்ப நிலை இங்கு உருவாகாமல் தவிர்க்கப்பட்டது.

இவ்வாறான செயற்பாட்டினை மேற்கொள்வதன் மூலம் தமிழ் முஸ்லிம் மக்களிடையே இனக்குரோதத்தினை ஏற்படுத்தி அளுத்தகம, பேருவள சம்பவத்தை மூடி மறைப்பதற்கு அரசிற்கு வாய்ப்பாக இருக்கும்.

இதேபோன்ற பல சம்பவங்களை 1990 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் மேற்படி பிரதேசங்களில் நடாத்தி வெற்றியும் கண்டுள்ளது என்பதை மறக்கமுடியாது.

எனவே ஹர்த்தால் அனுஷ்டிக்கும் முஸ்லிம் சமூகம் இவ்வாறான வேளைகளில் தமிழ் மக்கள் மீது தாக்குதல் நடாத்துவதை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக தமிழ் மக்கள் இவ்விடயத்தில் மிகவும் விழிப்பாக இருக்கவேண்டும்' என்று அவர் கேட்டுக்கொண்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .