2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

இலவச குடிநீர் இணைப்புக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வு

Kanagaraj   / 2014 ஜூன் 22 , பி.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹூஸைன்


ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சமூர்த்தி உதவி பெறும் 300 வறிய குடும்பங்களுக்கு இலவச குடிநீர் இணைப்புக்கான காசோலைகளை பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஞாயிற்றுக்கிழமை (22) வழங்கினார்.

ஏறாவூர் அல் அஷ்ஹர் மகளிர் உயர்தரப் பாடசாலையில் தாஜுல் மில்லத் ஹிஸ்புல்லாஹ் மன்றத்தின் தலைவர் எம்.எஸ். றவூப் தலைமையில் இந்நிகழ்வு இடம் பெற்றது.

இதேவேளை ஏறாவூரிலுள்ள 15 பள்ளிவாசல்களுக்கும் இலவச குடிநீர் இணைப்புக்கான காசோலைகள் வழங்கப்பட்டன.

அத்துடன் ஏறாவூர் ஜம்மிய்யத்துல் உலமா சபையில் அங்கத்துவம் வகிக்கும் 30 பேருக்கும் பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களினால் இலவச குடிநீர் இணைப்புக்கான காசோலைகள் வழங்கப்பட்டன.

ஹிறா பவுண்டேசன் உதவி அமைப்பினூடாக சவூதி நாட்டு நன்கொடையாளரின் அன்பளிப்பின் மூலம் இந்த இலவச குடிநீர் இணைப்புக்கான காசோலைகள் வழங்கப்பட்டதாக பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .