2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

ஏறாவூர் பற்று பிரதேச செயலாளரின் இடமாற்றத்தை இரத்து செய்யகோரி ஜனாதிபதிக்கு மகஜர்

Kanagaraj   / 2014 ஜூன் 22 , பி.ப. 02:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


தேவ அச்சுதன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் (செங்கலடி)  ஏறாவூர் பற்று பிரதேச செயலாளரின் இடமாற்றத்தினை இரத்துச் செய்யக்கோரி 10 ஆயிரம் பேரின் கையொப்பம் அடங்கிய மகஜர் ஒன்று ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக செங்கலடி வர்த்தக சங்கத் தலைவர் செல்லம் மோகன் தெரிவித்தார்.

 அம்மகஜரில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

 'ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களே! மட்டக்களப்பு மாவட்ட ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் இடமாற்றம் தொடர்பானது.

 மார்ச் 2012 ஆம் திகதி தொடக்கம் ஏறாவூர்பற்று பிரதேச செயலகத்தில் உ.உதயசிறிதரன் என்பவர் பிரதேச செயலாளராக கடமையாற்றி வருகிறார்.
 இவரது சேவையில் நாம் பூரண திருப்தி கொள்கிறோம். இது இவ்வாறு இருக்க மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்ட இணைப்பாளரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான அருண் தம்பிமுத்து பிரதேச செயலாளருடன் கொண்ட தனிப்பட்ட விருப்பு வெறுப்பு காரணமாக பிரதேச செயலாளரை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக நம்பகமாக அறியமுடிகிறது.

 நியாயமான முறையில் மக்களுக்கு சேவை புரியும் அதிகாரியின் இவ்விடமாற்றமானது நியாயமற்றது.

 தாங்கள் தலைமை தாங்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மீதும் எங்களுக்கு நம்பிக்கையீனமும் அதிருப்தியும் ஏற்படும் என நாம் கருதுகிறோம்.
 தயவு செய்து இவரது இடமாற்றத்தினை நிறுத்தி தருமாறும் இனிமேலும் அருன் தம்பிமுத்து தனிப்பட்ட முடிவுகளை இதர அரச அதிகாரிகள் மீது எடுத்து  மக்கள் பாதிக்காது நடவடிக்கை எடுக்குமாறு மிகவும் தயவுடன் கேட்டுக்கொள்கிறோம்' என அவ் மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 இம்மகஜரில், 10,000 பொதுமக்களின் கையொப்பமும் 32 ஆலயங்களின் நிர்வாகிகளின் கையொப்பமும் 23 பொது அமைப்புக்களின கையொப்பமும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .