2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

சீமைப்பனைகளைப் பாதுகாக்கும் செயற்றிட்டம்

Kanagaraj   / 2014 ஜூன் 22 , பி.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


மட்டக்களப்பு மாநகர சபை பிரதேசத்திற்குட்பட்ட சீமைப்பனைகளைப் பாதுகாக்கும் செயற்திட்டம் ஒன்றை மட்டக்களப்பு மாநகர சபை ஆரம்பித்துள்ளது.

அத்துடன், மாவட்டத்தில் பேரீச்சை மரங்கள் மூலம் மக்கள் பயனைப் பெற்றுக்கொள்ளமுடியும்; என்பதை எடுத்துக்காட்டும் வகையில் பேரீச்சை மரங்களை நடும் திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

உளளூராட்சி வாரத்தின் 5ஆம் நாள் நிகழ்வாக சுற்றாடல் மற்றும் மரம் நாட்டும் தினம் மரம் நடுவோம் வளமான சூழலிற்கு உரமிடுவோம் எனும் தொனிப்பொளில் மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் மா.உதயகுமாரின்; தலைமையில் நேற்றையதினம், மட்டக்களப்பு நகரில் பராமரிக்கப்படாமல் இருந்த பேரீச்சை மரங்கள் பாதுகாப்பான முறையில் பிடுங்கப்பட்டு திருப்பெருந்துறையில் மாநகர சபை திண்மக்கழிவகற்றும் பகுதியில் நாட்டப்பட்டது. 

இதன் மூலம் அப்பகுதியின் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் என மாநகர ஆணையாளர் உதயகுமார் தெரிவித்தார்.
மேலும் மட்டக்களப்பின் தனித்துவமான சீமைப்பனைகளை பாதுகாக்கும் செயற்திட்டத்தின் கீழ் மாநகர எல்லைக்குள் இருக்கும் மரங்களை இலக்கமிட்டு பாதுகாக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன் கீழ் 200 சீமைப்பனை மரங்களுக்கான இலக்கம் இடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டதாக மாநகர ஆணையாளர்  தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் தனித்துவங்களில் ஒன்றாகவும் மிகவும் குறைந்தளவில் உள்ளதுமான சீமைப்பனைகளை அழிக்கும் நடவடிக்கைகளில் சிலர் ஈடுபட்டுள்ளமை தொடர்பில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர்த்துக்கீசரால் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு கொண்டுவரப்பட்ட சீமைப்பனைகள் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு தனித்துவத்தினை ஏற்படுத்துகின்ற அதேவேளை போர்த்துக்கீச காலணித்துவத்தின் அடையாளத்தினையும் கொண்டுள்ளது.

இந்த சீமைப்பனைகள் எதிர்கால சந்ததியினருக்கு வரலாற்றினைக் கூறுவதாகவும் உள்ள நிலையில் அவற்றினை சிலர் அழிக்கமுனைவது எமது வரலாற்றினை அழிக்கமுனைவதாக அமையும்.

எனவே எமது மாவட்டத்தின் வரலாற்றினையும் தனித்துவத்தினையும் கொண்டுள்ள சீமைப்பனைகளை காக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அதற்கு அனைவரையும் ஒத்துழைப்பு வழங்குமாறும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்த அடிப்படையில் போர்த்துக்கீசர் காலத்தில் கொண்டுவரப்பட்டு நடப்பட்டதும் மட்டக்களப்பு மாவட்டத்தின் தனித்துவங்களில் ஒன்றாகவும் சீமைப்பனைகள் விளங்குகின்ற சீமைப்பனைகளை பாதுகாக்கும்  செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .